பூமியை விழுங்க போகும் சூரியன்! ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்

213
Advertisement

வெளிச்சம், வெப்பம், உணவு உற்பத்தி என உலகில் உயிர்கள் வாழ ஆதாரமாக திகழ்வது சூரியன்.

அண்மையில்,  சூரியன் இன்னும் எவ்வளவு நாட்கள் இருக்க போகிறது போன்ற ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், Astrophysical Journal என்ற அமெரிக்க அறிவியல் இதழில், சூரியனில் இருக்கும் மொத்த எரிபொருளும் செலவழிந்த பின் பூமியில் என்ன மாற்றம் நேர வாய்ப்புள்ளது என்ற அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்துள்ளனர்.

அதன்படி, அடுத்த ஐந்து பில்லியன் வருடங்களில் சூரியனில் உள்ள ஹைட்ரஜன் முழுமையாக செலவாகிய பின், சூரியனின் பரப்பளவு நூறு மடங்கிற்கு மேல் அதிகரிக்கும் என்றும், முதல் மூன்று கோள்களான புதன், வெள்ளி மற்றும் பூமியை சூரியன் உள்வாங்கி கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்படியே உள்வாங்கப்படாவிட்டாலும் கூட, உயிர்கள் வாழக்கூடிய சூழலை பூமி இழந்துவிடும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.