ஸ்டார்லிங்க் என்பது இணைய சேவையை வழங்கும் செயற்கைக்கோள்களின் வலையமைப்பு. இந்த சேவை 2019 ஆம் ஆண்டு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.
ஸ்பேஸ்எக்ஸின் செயற்கைக்கோள் இணைய சேவை, பூட்டான் மற்றும் வங்கதேசத்துக்குப் பிறகு இலங்கையில் தொடங்கப்பட்டுள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஈலோன் மஸ்க் தனது சமூக ஊடக தளமான எக்ஸில் ஸ்டார்லிங்க் இலங்கையில் கால் பதிப்பதை அறிவித்தார்.
ஸ்டார்லிங்க் விரைவில் இந்தியாவிற்கும் வரவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.