இந்தியாவின் உச்ச நட்சத்திரங்கள் இணையும் ‘தளபதி 67’! எகிற வைக்கும் எதிர்ப்பார்ப்புகள்

186
Advertisement

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 67’ படத்தை பற்றிய எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

லோகேஷின் முந்தய படங்களான கைதி, விக்ரம் வரிசையில் இந்த படமும் LCUவின் கீழ் வரும் பட்சத்தில், கமல் ஹாசன், கார்த்தி, சூர்யா, பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் தளபதி 67இன் கதையிலும் தொடர்ந்து பயணிப்பார்கள்.

அது மட்டுமில்லாமல் சஞ்சய் தட், நிவின் பாலி என பிற மாநில முன்னணி நடிகர்களும் இணைய உள்ளதாக அடிபடும் தகவல்கள் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தியுள்ளது.

மேலும் த்ரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஸ்கின் மற்றும் கவுதம் மேனன் ஆகியோரும் நடிக்க உள்ளதாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது சியான் விக்ரமும் படத்திலும், LCUவிலும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.