“கல்வி உரிமையை பெறுவதே பெண்ணுரிமையை பெறுவதற்கான முதல் படிக்கட்டு”

491

சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி., கல்லூரிக்கு தேசிய தர நிர்ணயக்குழுவின் A+ சான்றிதழ் வழங்கப்பட்டதை ஒட்டி, இன்று பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர், 123 பேருடன் 1955-இல் தொடங்கப்பட்ட இந்த கல்லூரியில் பயின்று நாடு முழுவதும் ஏராளமான பெண்கள் சாதனை படைத்து வருவது பெருமைக்குரியது என்று தெரிவித்தார்.

பெண்ணுரிமையை பாதுகாப்பதற்கும், அதனை பெறுவதற்கும் கல்வி உரிமைதான் வழிகாட்டியாக திகழ்கிறது என்று கூறினார்.

மகளிர் உயர்கல்வியை பெறுவதற்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என்றும் முதல்வர் தெரிவித்தார்.