திடீரென பற்றி எரியும் மனிதன்!அதிர்ச்சியில் மருத்துவர்கள்

372
Advertisement

உயிருள்ள மனிதன் சில நேரங்களில் எந்தவொரு தீ மூட்டியும் இல்லாமல் பற்றி எரியும் நிகழ்வை மாந்தர் தாமாக பற்றி எறிதல்,இதை ஆங்கிலத்தில்  spontaneus human combustion என்று கூறுவார்கள்,வரலாற்றில் கண்டனத்தை 300 ஆண்டுகளில் 200 நிகழ்வுகள் இதுபோன்று நிகழ்ந்துள்ளதாம்,இதில் பெரும்பாலானவை இன்னும் நிரூபிக்க படாத ஒன்று,தாமாக எரிந்ததாக சொல்லப்படும் இதில் மனித உடல் எரியும்பொழுது அருகில் எறிவூட்ட கூடிய எந்த ஒரு பொருளும் இல்லாமல் இருத்தல்,எலும்புகள் வரை எரிந்த நிலையிலும், உடலில் கால்கள் போன்ற சில உறுப்புகள் எரிந்துவிடாமல் இருத்தல் போன்றவற்றினால் இது குழப்பத்திலேயே உள்ளதாக குறிப்புடப்பட்டிருக்கிறது.

உடலுக்குள் இயல்பாக உருவாகும் மெத்தேன், பலர் அருந்தும் மது வகைகளில் உள்ள சாராயம், போன்றவை சில அரிதான சூழல்களில் தீ மூட்டாமலேயே பற்றிக் கொள்வது போன்றவை இதுவரை அறியப்படாத இயற்கைக் காரணிகளாக உள்ளது.குறைந்த வெப்பத்தில் எரியும் உறுப்புகள்   நொதிப்பதால் சூடேறக் கூடும், உள்ளிருந்து உருவாகும் வெப்பம் வெளியேற வழியின்றி மிகுதல் போன்றவை காரணங்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது,இவ்வாறு இருந்தாலும் உள்ளுறுப்புகள் தான் முதலில் சேதம் ஆகவேண்டும் ஆனால் வெளிபாகங்களே சேதமடைகிறது என்னும் சந்தேகங்கள் இருந்துவருகிறது .விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பரஸ்கனி கிராமத்தைச் சேர்ந்த குழந்தை உடலில் திடீரென தீப்பற்றியது அது  எப்படி என்பது குறித்து மருத்துவர்கள் பரிசோதனகள் செய்தனர்.

குழந்தையின் உடலில் இருந்து ரத்தம், சிறுநீர், மற்றும் தோல் ஆகியவற்றில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. குழந்தையின் ஆய்வு முடிவுகளில் எந்த வித பிரச்னைகளும் இல்லை, குழந்தைக்கு உடலில் தானாக தீப்பற்றிக் கொள்ளும் அதிசய நோய் இருப்பதற்கான வாய்ப்பும்  இல்லை என்று மருத்துவர்கள் கூறினர்.

இவ்வாறு இருக்க இந்த விஷயம் புரியாத புதிராகவே இருக்கிறது.