Tuesday, September 30, 2025

தாளாளர் கையெழுத்திட்ட காசோலையில் எழுத்துப்பிழை: மாணவர்களின் எதிர்காலம்? வைரலாகும் புகைப்படம்!!

இமாச்சல பிரதேச மாநிலத்தில் பள்ளி தாளாளர் ஒருவர் காசோலையில் ஆங்கில எழுத்து வடிவில் எழுதியது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, அரசு பள்ளி தாளாளர் கையெழுத்திடப்பட்ட காசோலையில் எழுதப்பட்டிருந்தது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த காசோலையில் 7,616 ரூபாய் என எழுதப்பட்டுள்ளது. மேலும், அதற்கு ஆங்கிலத்தில் seven thousand six hundred and sixteen என்பதற்குப் பதிலாக Saven Thursday six harendra sixty Rupees Only என எழுத்தியுள்ளார்.

மேலும், Seven-க்குப் பதிலாக saven எனவும், Thousand என்பதற்கு பதிலாக Thursday எனவும் எழுதப்பட்டுள்ளது. hundred என்தற்குப் பதிலாக, harendra என எழுதப்பட்டுள்ளது.

“ஒரு பானைக்கு ஒரு சோறு பதம்” என்ற பழமொழியை கேட்டிருப்போம். இது பழமொழியாக இருந்தாலும் அனைத்திற்கும் பொருந்தும். அதுபோல ஒரு பள்ளி தாளாளரே இப்படி எழுதினால், பள்ளிக் குழந்தைகள் நிலை என்ன? என சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News