ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு வாரத்தில் ஒருநாள் மட்டும் ரெயில் இயங்கும். செப்டம்பர் 29, அக்டோபர் 06, 13, 20, 27 (திங்கட்கிழமை) ஆகிய தேதிகளில் மட்டும் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படும். தாம்பரத்திலிருந்து பிற்பகல் 3.30 மணிக்கு கிளம்பும் இந்த ரெயில், நாகர்கோவிலில் மறுநாள் காலை 5.15 மணிக்கு சென்றடையும்.
நாகர்கோவிலிலிருந்து தாம்பரத்திற்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படும். செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 26 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இந்த ரெயில் இயக்கப்படும். நாகர்கோவிலிலிருந்து இரவு 11.15 மணிக்கு கிளம்பும் இந்த ரெயில், தாம்பரத்தில் மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு வந்து சேரும்.
இந்த ரெயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்தை அடையும்.
இந்த ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
