ஆயுத பூஜை, விஜயதசமி, காலாண்டு விடுமுறைக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் 3,190 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 565 பேருந்துகளும், திங்கட்கிழமை 190 பேருந்துகளும், செவ்வாய்க்கிழமை 885 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு ஆகிய ஊர்களுக்கு இன்று 790 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு இன்றும், நாளையும் 215 பேருந்துகளையும், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை 185 பேருந்துகளையும் இயக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய ஊர்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பணியிடங்களுக்கு திரும்புவதற்கு ஏதுவாக, அக்டோபர் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகளை இயக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.