Saturday, September 27, 2025

தொடர் விடுமுறை சிறப்பு பேருந்து இயக்கம்.. போக்குவரத்து துறை ஆலோசனை

பள்ளிகளுக்கு நாளையில் இருந்து காலாண்டுத் தேர்வு விடுமுறை, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை என தொடர் விடுமுறை என்பதால் சிறப்பு பேருந்து இயக்குவதை குறித்து நேற்று {செப் 24} தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அதில் இதுத் தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் பேசியதில்; ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, நாளை முதல் வரும் 30-ந் தேதி வரை 3,225 சிறப்பு பஸ்கள் உள்பட 11,593 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

மேலும், தீபாவளி பண்டிகைக்கு, சென்னையில் இருந்து அக்டோபர் 16-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 4,253 சிறப்பு பஸ்கள் உள்பட 10,529 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதாவது, 9,963 சிறப்பு பஸ்கள் உட்பட மொத்தம் 24,607 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அடுத்த மாதம் முதல் வாரத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிடுவார் என்று தெரிவித்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News