Wednesday, February 18, 2026

நாளை பேரனின் காதணிவிழா.. நடக்க இருந்த நிலையில் சோகம்!!

சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி வெள்ளித்திரைக்கு வந்தவர் ரோபோ சங்கர். இவர் விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுள் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்துள்ளார்.

இந்த நிலையில், ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் குணமாகி, மீண்டும் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில்,புதன்கிழமை காலை படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயக்கமடைந்தார். அவரை உடனடியாக மீட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரோபோ சங்கர் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்த சூழலில், நேற்று மாலை அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மருத்துவர்கள் மாற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு 9.05 மணியளவில் உயிரிழந்தார் என்று தகவல் வெளியாகின. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரோபோ சங்கருக்கு கவிஞர் மற்றும் நடிகர் சினேகன் நேரடியாக அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர், பேசிய கவிஞர் சினேகன், “ரோபோ சங்கரின் மரணம் மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கிறது. அவரின் முதல் மேடையில் இருந்து அவருடன் பயணம் செய்து வருகிறேன். அழுதுகொண்டே தனது வருத்தத்தை வெளிப்படுத்தினர்.மேலும், பேசிய சினேகன், ரோபோ சங்கர்,யாருடைய மனமும் வாடாத அளவு நடந்துகொள்வார். உடல்நிலையை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. அவரின் பேரனுக்கு நாளை காதுகுத்து வைத்திருந்தார். இந்த நேரத்தில் இப்படியான துயரம் நிகழ்ந்திருப்பது கூடுதல் வேதனையை தருகிறது” என்று கூறினார்.

Related News

Latest News