பெட்ரோல் விலை கவலை இனி இல்ல…ஒரு முறை சார்ஜ் பண்ணா 172 கி.மீ  பயணம்!

376
Advertisement

அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில் முன்னணி வர்த்தக நிறுவனங்கள் கால்பதிக்க நினைப்பது வாடிக்கை.

சமீப காலமாக உயர்ந்து வரும் பெட்ரோல் விலை, அதிகரித்து வரும் சுற்றுசூழல் விழிப்புணர்வு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பெருகி வரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டை குறிவைத்து களம் இறங்குகிறது ஸ்பெயின் நாட்டை சேர்ந்த சியாட் நிறுவனம். இந்நிறுவனத்தின் ஆரம்ப விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகமாக உள்ள ஸ்கூட்டரின் பெயர் மோ 50.

7.3 கிலோ வாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் இயக்க ஆற்றலை பெற்றுள்ள மோ 50யின் பேட்டரியை ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 172 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் சிட்டி, ஸ்போர்ட் மற்றும் ஈக்கோ என மூன்று வகையான ரைடிங் மோட் (riding mode)களையும் இந்த பைக் கொண்டுள்ளது. ஸ்கூட்டரின் முன் பக்கத்தில் உள்ள Telescopic Spokes, பின் பக்கத்தில் உள்ள free load adjustment கொண்ட monoshock ஆகியவை இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் ஆகும்.

2023ஆம் ஆண்டின் பாதிக்குள் இந்த பைக் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தரமான suspension மற்றும் பிரேக்குகள் கொண்ட மோ 50க்கு  குறைந்தபட்சமாக 80,000 ரூபாய் விலை நிர்ணயிக்கப்படலாம்.

மோ 50 இந்திய மோட்டார் சந்தைக்கு வந்த பின் தற்போதைய முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக விளங்கும் டிவிஎஸ் ஐ-க்யூப் (iqube), பஜாஜ் சேத்தக் (chetak) , ஏத்தர் 450எக்ஸ் மற்றும் ஓலா எஸ்1 போன்ற ஸ்கூட்டர்களின் போட்டியை சமாளித்து தாக்குப்பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.