Friday, March 28, 2025

இந்தியாவிற்குள் நுழைய முயன்ற தென்கொரியாவை சேர்ந்த பெண் கைது

நேபாள எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற தென்கொரியாவை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைக் மாவட்டத்தில் உள்ள ரூபைதிகா பகுதி அருகே நேற்று முன்தினம் போலீசார் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, நேபாள எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற பெண்ணை தடுத்து நிறுத்தினர்.

அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பார்க் செர்யோன் என்பதும், அவர் தென்கொரியா நாட்டில் உள்ள சியோல் நகரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில், போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest news