Wednesday, January 14, 2026

Zombieகளுக்கு தனி போக்குவரத்து விதிகள் விதித்த தென் கொரியா!

இயற்கைக்கு அப்பாற்பட்ட கதைக்களங்களை கொண்ட திகில் படங்களில் வரும் Zombie கதாப்பாத்திரங்கள்  தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் சுற்றி கொண்டிருக்கும்.

தென் கொரியாவில் zombieகள் ஊடுருவல் இருக்கிறதா என்ன, என்று நினைப்பவர்களுக்கு, அதை விட பெரிய ஆபத்தை தவிர்க்கத் தான் தென் கொரியா அரசு இம்முடிவை எடுத்துள்ளது என பின்வரும் செய்தியை பார்த்தால் தெரியும்.

Zombieகளை போலவே, தங்களை சுற்றி நடப்பது தெரியாமல் மெய்மறந்து phone பயன்படுத்துபவர்களுக்கு Smartphone Obsessed Zombies என அர்த்தம் கொள்ளும்  Smombies என்ற பெயர் ட்ரெண்டில் உள்ளது.

இது போல Phone யூஸ் செய்து கொண்டே சாலையை கடக்கும் பாதசாரிகளுக்கு ஏற்படும் விபத்துகளை தவிர்க்கவே ஒரு புது முயற்சியை கையில் எடுத்துள்ளது தென் கொரிய அரசு. Traffic Light சிக்னலில் விழும் மாற்றங்களை phone zombies பார்க்க தவறுவதால், சாலையிலும் சேர்த்து பாதசாரிகளுக்கான சிக்னலாக LED லைட் ஒளிரும் வகையில் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய யுக்தி பாதசாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News