தமிழக சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான விவாதத்தில் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் சவுமியா அன்புமணி பல்வேறு மக்கள் நல கோரிக்கைகளை முன்வைத்து உரையாற்றினார். மதுவிலக்கு, நீர் மேலாண்மை, பெண்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், கனிமவள கொள்கையை தடுக்கவும், மணல் கொள்ளையை கட்டுப்படுத்தவும் கடுமையான நடவடிக்கை தேவை எனக் கூறினார். அனைவருக்கும் தரமான இலவச மருத்துவ சேவையும், சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
போதையில்லா தமிழ்நாடு என்பதே பா.ம.க.வின் நிலைப்பாடு என்றும், முழுமையான மதுவிலக்கை அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த 40 ஆண்டுகளாக மதுவை ஒழிக்க பா.ம.க. போராடி வருவதாகவும் குறிப்பிட்டார். தருமபுரி மாவட்டத்தில் மதுப்பழக்கம் மற்றும் மது விற்பனை அதிகரித்துள்ளதாக கூறிய அவர், ஒரு மதுக்கடையை மூடினாலும் அருகில் பல சந்துக்கடைகள் திறக்கப்படுவதாக கவலை தெரிவித்தார். இதனை தடுக்க முதலமைச்சர் விஜய் தொடர்ந்து கண்காணிப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.
மேலும், த.வெ.க. தலைமையிலான ஆளுங்கட்சியின் தேர்தல் அறிக்கை பா.ம.க. கொள்கைகளுடன் ஒத்துப்போகும் வகையில் இருப்பதாக தெரிவித்தார்.
“எனது பேரக்குழந்தைகள் வளரும்போது போதை இல்லாத தமிழ்நாடு உருவாக வேண்டும் என்பதே என் ஆசை. அதுவே தமிழ்நாட்டு பெண்களின் எதிர்பார்ப்பும் ஆகும்” என்றார்.
இறுதியாக, நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இருந்து பா.ம.க. விலகி இருக்க விரும்புவதாக சவுமியா அன்புமணி தெரிவித்தார்.
இதற்கிடையே, “மதுக்கடைகள் குறித்து சட்டமன்றத்தில் சவுமியா அன்புமணி பேசியபோது, உடனடியாக பேப்பர் எடுத்து முதலமைச்சர் விஜய் குறித்துக்கொண்டார்.
