‘லியோ’ படத்தில் விஜய் பாடிய பாடல்! ஷூட்டிங் ஸ்பாட்டில் சுட சுட ரெடியான சம்பவம்…

62
Advertisement

கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஜய்  பாடும் பாடல்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு.

பின்னணி பாடகர்களை பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பாடும் விஜயின் குரல் வளத்தையும் ராக நேர்த்தியையும் ரசிக்காமல் இருக்க முடியாது.

ஆரம்ப காலகட்டங்களில் படத்திற்கு ஒரு பாடல் எனப் பாடி வந்த விஜய் இடைப்பட்ட காலங்களில் பாடல் பாடாமல் இடைவெளி விட்டிருந்தார். ‘துப்பாக்கி’ படத்தில் இருந்து திரும்பவும் பாடும் ட்ரெண்டை தொடங்கிய விஜய்க்கு அமோக வரவேற்பு கிடைத்தது. தற்போது  விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்திலும் அவர் பாடும் பாடல் பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ‘லியோ’ படத்திற்கான பாடலை விஜய் பாடி முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பத்து நாட்களாக rehearsal நடந்து முடிந்த நிலையில், அடுத்த பத்து நாட்களில் பாடலின் ஷூட்டிங் நடைபெற்று அதை தொடர்ந்து படத்தின் கிளைமாக்ஸ் காட்சியும் படமாக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

அனிருத் பாடிய draftஐ வைத்து ஒத்திகை நடைபெற்றதால், பாடலை ஏற்கனவே நன்கு பழகிய விஜய் ஒன்றரை மணி நேரத்தில் இந்த பாடலை பாடி முடித்துள்ளார். விஜய் ஷூட்டிங்கில் பிசியாக இருந்ததால், மொபைல் டப்பிங் ஸ்டுடியோவில் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து அனிருத் இந்த பாடலை ரெக்கார்ட் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.