உத்தர பிரதேசத்தின் மீரட் கன்டோன்மென்ட் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் காரை ஒருவர், ஓட்டிச்செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இது தொடர்பாக ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், அந்தக் காரை ஓட்டியது ராணுவ வீரர் சந்தீப் தாக்கா என்பது தெரிய வந்தது. மேலும் அவர் குடிபோதையில் வாகனத்தை இயக்கியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்த காரை பறிமுதல் செய்துள்ளனர்.