நாம் சாலையில் செல்லும் போது, பலவித நிறங்களில் எண் பலகைகள் அதாவது Number Plate-களை பார்க்கிறோம். இந்த நிறங்கள் வெறும் அலங்காரம் அல்ல, ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட அர்த்தம் மற்றும் சட்ட விதிமுறைகள் உள்ளன. அவை என்ன என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வெள்ளை நிற பலகை – இது பொதுவாக தனியார் வாகனங்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் கருப்பு எழுத்துக்கள் இடம்பெறும். கார் அல்லது பைக் போன்ற தனிப்பட்ட பயன்பாட்டுக்கான வாகனங்கள் இதையே பயன்படுத்துகின்றன.
அடுத்து மஞ்சள் நிற பலகை – Taxi, Van, Bus, Lorry போன்ற வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள் மஞ்சள் நிற பலகையையே பயன்படுத்த வேண்டும். இதில் கருப்பு எழுத்துக்கள் இடம்பெறும். பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களும் இதற்குள் அடங்கும்.
அடுத்து கருப்பு நிற பலகை – Rental Cars, Self-Drive Cars போன்ற வாடகைக்கு விடப்படும் வாகனங்களில் கருப்பு நிற பலகை இடப்படும். இதில் மஞ்சள் எழுத்துக்கள் இருக்கும். இவை தனியாருக்கு சொந்தமாக இருந்தாலும் வாடகை சேவைக்கே பயன்படுத்தப்படுகின்றன.
அடுத்து நீல நிற பலகை – வெளிநாட்டு தூதரகங்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு நீல நிற பலகை கொடுக்கபப்டும். இதில் வெள்ளை எழுத்துக்கள் இருக்கும்.
அடுத்து சிவப்பு நிற பலகை – இது மிக விசேஷமானது. குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர்கள் போன்ற உயர் பதவியில் உள்ளவர்களின் வாகனங்களுக்கு சிவப்பு பலகை வழங்கப்படுகிறது.
அடுத்து பச்சை பலகையில் வெள்ளை எழுத்து இருந்தால் அது மின்சார வாகனங்கள் தனியார் பயன்பாட்டிற்கு கொடுக்கப்படும்.
கடைசியாக பச்சை பலகையில் மஞ்சள் எழுத்து இருந்தால் அவை மின்சார வாகனங்கள். இது போன்ற வாகனங்கள் வணிக டாக்ஸி பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது.