Saturday, August 30, 2025
HTML tutorial

அப்போ இனி சிவகார்த்திகேயனுக்கு மார்கெட் காலியா? சினிமாவுக்கு வந்த புது வரவு!!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ஜொலித்து கொண்டு இருப்பவர் சிவகார்த்திகேயன். கடந்த ஆண்டு அமரன் எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த இவர், அடுத்ததாக மதராஸி திரைப்படத்துடன் செப்டம்பர் 5ம் தேதி களமிறங்குகிறார். இந்த திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

உலகளவில் ஒருவரை போலவே ஏழு பேர் இருப்பார்கள் என பெரியவர்கள் கூறி நாம் கேள்விப்பட்டு இருப்போம். அதை சில சமயங்களை கண்கூடாக அனுபவம் செய்திருப்போம்.

அந்த வகையில், தற்போது பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் போலவே இருக்கும் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதாவது, இவருடைய பெயர் ஜெய்சீலன் சிவராம். இவரும் ஒரு நடிகர்தான். அசோக் செல்வனுடன் இணைந்து சபா நாயகன் எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜெய்சீலன் சிவராம்.

இந்த நிலையில், தற்போது மிர்ச்சி செந்தில் நடிப்பில் உருவாகியுள்ள போலீஸ் போலீஸ் எனும் வெப் தொடரில் இரண்டாம் கதாநாயகனாக ஜெய்சீலன் சிவராம் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சீரியல் நடிகை ஷபானா நடித்துள்ளார். இவரின் இந்த கதாபாத்திரத்தின் தோற்றம் பார்ப்பதற்கு சிவகார்த்தியேகன் போவே இருக்கிறது என்றும் பலரும் கூறிவருகின்றனர். மேலும் அவரது புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது..

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News