Sunday, December 7, 2025

தங்கத்தை விட விலைமதிப்பான பாம்பின் விஷம்! அதிசய இயற்கை மருந்து! ஏன் இவ்வளவு காஸ்ட்லி?

இயற்கையாகவே பாம்பின் விஷம் அரியதும் ஆபத்தானதுமான ஒன்று. அதை சேகரிப்பதும் சுத்திகரிப்பதும் மிகுந்த திறமையும் ஆபத்து நிறைந்த பணியாகும். மருத்துவ உலகில் அதற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதன் விலை தங்கத்தையும் மீறியுள்ளது.

பாம்புகள் உலகம் முழுவதும் பயத்தையும் வியப்பையும் ஏற்படுத்தும் உயிரினங்களாக கருதப்படுகின்றன. ஆனால் அவை வெறும் ஆபத்தானவைகள் அல்ல. இயற்கையின் சமநிலையை பேணும் முக்கிய உயிரினங்களாகும். எலி மற்றும் பூச்சி இனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதன் மூலம், அவை சுற்றுச்சூழல் சமநிலையை தக்கவைத்துக் கொள்கின்றன.

பாம்பின் விஷம் வெறும் Antivenom தயாரிப்பிற்காக மட்டுமல்லாமல், பல்வேறு மருந்துகளிலும் அற்புதமான பயன்களை அளிக்கிறது. உதாரணமாக, King Cobra விஷம் தசை மற்றும் நரம்பு வலி குறைக்கும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

இதில் புரதச்சத்து மிகுந்திருப்பதால், மருத்துவ ரீதியாக அதற்கு பெரும் மதிப்பு உண்டு. இதன் விலை ஒரு கேலனுக்கு சுமார் 1.25 கோடி ரூபாய் ஆகும். அதேபோல், Coral Snake மற்றும் Brown Snake விஷங்களும் ஒரு கிராமுக்கு 3.3 லட்சம் ரூபாய் மதிப்பு பெறுகின்றன. இவை வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.

விஷமுள்ள பாம்புகள் மனிதருக்கு ஆபத்தானவையாக இருந்தாலும், அவற்றின் விஷம் மனித வாழ்வை காப்பாற்றும் இயற்கையின் அரிய பரிசாகும். எனவே, பாம்புகளை அழிப்பதற்குப் பதிலாக அவற்றை பாதுகாத்து, விஞ்ஞான அடிப்படையில் பயன்படுத்துவது மனிதகுல நலனுக்கு பெரும் பயனளிக்கும் என்று கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News