கன்னட சினிமாவின் முன்னணி இயக்குனரும் நடிகருமான உபேந்திரா Ui என்ற திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். அந்த திரைப்படம் நேற்று வெளியானது. படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு ஆரம்பத்திலேயே ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அது என்னவென்றால் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு திரையில் தோன்றிய வரிகளில் : புத்திசாலிகள் முட்டாள்களை போல் தெரிவார்கள், முட்டாள்கள் தங்களை புத்திசாலிகளை போல் காட்டிக்கொள்வார்கள், நீங்கள் முட்டாளாக இருந்தால் முழு படத்தையும் பாருங்கள், நீங்கள் புத்திசாலியாக இருந்தால் தியேட்டரை விட்டு வெளியேறுங்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.
இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியதால் வெளியே செல்ல முடியாமல் வேறு வழியில்லாமல் அந்த படத்தை பார்த்துள்ளனர். இது தொடர்பாக புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.