Monday, December 1, 2025

பாம்பு கடித்ததில் தூங்கிக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் பாம்பு கடித்ததில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள செய்யூர் அடுத்த நல்லூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் அருள்குமார். இவர் தற்பொழுது சென்னை திருவொற்றியூர் வேலை சம்பந்தமாக அங்கு சென்று அங்கேயே தங்கி உள்ளார்

அருள்குமார் அவரது தாய் மாமன் வேலு என்பவர் ஐயப்பன் சுவாமிக்கு மாலை போட்டுள்ளார். இதனால் இவர் இருமுடி கட்டிக்கொண்டு மலைக்குச் செல்ல இருப்பதால் அருள்குமார் மற்றும் அவரது தம்பி மகன் மித்ரன் 8 வயது இருவரும் நல்லூர் கிராமத்திற்கு வந்து இரவு தங்கி உள்ளனர்.

அப்பொழுது இரவு உறங்கிக் கொண்டிருந்த பொழுது கட்டுவிரியன் பாம்பு ஒன்று தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் மித்ரனை கடித்துள்ளது

உடனடியாக அவர்களது உறவினர்கள் சிறுவனை அழைத்துக் கொண்டு செய்யூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலன்றி இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News