தூக்கம் என்பது இயற்கையாகவே நமக்கு கிடைத்துள்ள வரம் ஆகும். ஒரு மனிதனுக்கு சராசரியாக நாள்தோறும் 6 முதல் 7 மணி நேர தூக்கம் அவசியம் ஒன்றாகும் . அதற்குக் குறைவாகத் தூங்கினாலும், அதையும் தாண்டி நீண்ட நேரம் தூங்கினாலும், அது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்குமாம். சரியான அளவில் தூக்கம் இல்லையென்றால், அது நம்மை 7 ஆண்டுகளுக்கு முன்னதாகவே முதுமை அடைய வைத்துவிடுமாம். மேலும் ஆண்களை விட பெண்கள் தினமும் அரை மணி நேரம் கூடுதலாக தூங்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும், இந்தியர்களிடையே அண்மையில் Sleep Divorce என்ற பழக்கம் உருவெடுத்துள்ளது.
அது என்ன Sleep Divorce என்று கேட்குறீங்களா ?
அதாவது திருமணத்திற்கு பின்பும் கணவன், மனைவி தனித்தனியே தூங்கும் இந்த தூக்க விவாகரத்து பழக்கத்தை 70% பேர் விரும்புவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.இதற்கு குறட்டை, மாறுபட்ட பணி நேரம் போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன. வேலை செய்து களைத்த தம்பதிகள் நிம்மதியான தூக்கத்தைப் பெற விரும்பி இந்த Sleep Divorce பழக்கத்தை அதிகம் கைக்கொண்டுள்ளனர்.