2003-ம் ஆண்டு தொடக்கத்தில், ஆடியோ மற்றும் வீடியோ தொடர்பு உலகில் புதிய முன்னோடியாக அவதரித்தது ஸ்கைப் செயலி. ஆனால் இன்று, வாட்ஸ்அப், டெலிகிராம், ஸ்நாப்சாட் போன்ற புதிய செயலிகள் வந்துவிட்டதால் Skype செயலியின் பயன்பாடு குறைந்துவிட்டது.
2011-ம் ஆண்டு, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சுமார் 8.5 பில்லியன் டாலர்களுக்கு ஸ்கைப் செயலியை கைப்பற்றியது. இந்த ஒப்பந்தம் தொழில்நுட்ப உலகை அதிர்ச்சியடையச் செய்தது.
இந்நிலையில் மே 5 ஆம் தேதி முதல் இந்த செயலி இயங்காது. இது இலவச மற்றும் கட்டண ஸ்கைப் பயனர்களைப் பாதிக்கும், ஆனால் வணிகத்திற்கான ஸ்கைப்பை அல்ல” என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. ஸ்கைப் பயனர்களுக்கு “Teams” செயலியை பயன்படுத்த மைக்ரோசாஃப்ட் அறிவுறுத்தியுள்ளது.