Wednesday, October 8, 2025

பாராசூட் இல்லாமல் விமானத்தில் இருந்து கீழே குதித்த ஸ்கை டைவிங் பயிற்சியாளர் பலி

அமெரிக்காவின் டென்னசி மாகாணம் நாஷ்வில் நகரை சேர்ந்தவர் ஜெஸ்டின் புல்லர் (வயது 35). இவர் விமானத்தில் இருந்து கீழே குதித்து சாகசம் செய்யும் ஸ்கை டைவிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.

கடந்த சனிக்கிழமை, ஜெஸ்டின் 46 வயதான ஒருவருக்கு ஸ்கை டைவிங் பயிற்சியினை வழங்கினார். அந்த நபர் பாராசூட் உதவியுடன் விமானத்தில் இருந்து கீழே குதித்த போது, ஜெஸ்டின் பாராசூட் இல்லாமல் குதித்துள்ளார்.

மின்னல் வேகத்தில் தரையில் விழுந்த ஜெஸ்டின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பயிற்சிக்கு வந்த அந்த நபரின் பாராசூட் மரக்கிளையில் சிக்கியதனால், அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதையடுத்து உயிரிழந்த ஜெஸ்டினின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News