சிவகங்கை மாவட்ட எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோயில் காவலாளி அஜித்குமார் விசாரணைக்காக அழைக்கப்பட்டு, காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5 காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம் எஸ்.பி. சந்தீஷ் சிவகங்கை மாவட்ட எஸ்.பி. பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News