இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அறிமுகமான தமிழக வீரர் சாய் சுதர்சன், 2வது டெஸ்டில் நீக்கப்பட்டார். இதையடுத்து 2வது டெஸ்டில் தமிழக வீரரும், ஆல்ரவுண்டருமான வாஷிங்டன் சுந்தருக்கு இடம் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே சுந்தர் நன்றாக பெர்பார்ம் செய்தார்.
இந்திய அணியும் 2வது டெஸ்டில் 336 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்று, டெஸ்ட் தொடரினை மேலும் விறுவிறுப்பாக்கி உள்ளது. இந்தநிலையில் களத்தில் வாஷிங்டன் சுந்தரை வேகப்பந்து வீச்சாளர் சிராஜ், கெட்ட வார்த்தை சொல்லி திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பர்மிங்காமில் நடைபெற்ற, 2வது டெஸ்டின் 5வது நாள் ஆட்டத்தின்போது இந்த விஷயம் நடந்துள்ளது. இங்கிலாந்து 3 விக்கெட்களை இழந்து தடுமாறிய போது, போட்டியின் 35வது ஓவரை சிராஜ் வீசினார். 2வது பந்தை எதிர்கொண்ட ஸ்மித் கவர் திசையில் தட்டிவிட, அங்கு பீல்டிங் செய்த சுந்தர் பந்தை தவறவிட்டு விட்டார்.
இதை பயன்படுத்தி ஸ்டோக்ஸ், ஸ்மித் இருவரும் 1 ரன் ஓடி எடுத்தனர். இதைப்பார்த்த சிராஜ், கோலி அடிக்கடி களத்தில் பயன்படுத்தும் மோசமான கெட்டவார்த்தை ஒன்றினை சொல்லி சுந்தரை வசைபாடினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதைப்பார்த்த ரசிகர்கள், ” உங்களால விக்கெட் எடுக்க முடியலைன்னா, அவரை கெட்ட வார்த்தையிலே திட்டுவீங்களா? இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல,” இவ்வாறு சரமாரியாக சிராஜை விமர்சித்து வருகின்றனர்.