டேவிட் வார்னர் தலையை பதம் பார்த்த சிராஜின் பந்து! மூளை அதிர்ச்சி பாதிப்பால் அவதி

233
Advertisement

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான  பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் இரண்டாம் போட்டி நேற்று நடந்தது.

நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த இரண்டாம் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி batingஐ தேர்வு செய்தது.

நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 21 ரன்களை எடுத்த இந்தியா இன்றைக்கு இரண்டாவது நாள் bating செய்து வருகிறது. நேற்றைய போட்டியில் சிராஜ் வீசிய இரண்டு பௌன்சர் பந்துகள் டேவிட் வார்னருக்கு காயத்தை ஏற்படுத்தியது.

முழங்கையில் ஒரு முறை பந்து தாக்க, சில பந்துகள் கழித்து சிராஜ் வீசிய இன்னொரு பவுன்சர் வார்னரின் ஹெல்மெட்டை தாக்கியது. நேற்றைய fieldingஇல் பங்கு பெறாத வார்னர், மூளை அதிர்ச்சி காரணமாக டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள ஆஸ்திரேலிய அணி, அவருக்கு பதிலாக Matt Renshawவை களமிறக்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர் போட்டியில் இருந்து விலகி இருப்பது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது