கடந்த 8ஆம் தேதி +2 பொது தேர்வு முடிவுகள் வெளியானது அதில் 600-க்கு 600 மதிப்பெண்களை பெற்று வரலாற்று சாதனை படைத்தார் திண்டுகல்லை சேர்ந்த மாணவி நந்தினி.
மாணவியை தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக வலம் வந்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் மாணவியை தனது சமூகவலைதளபக்கமான டீவ்ட்டரில் வாழ்த்தியிருந்தார் ,அதில் அவர் கூறியிருந்ததாவது,
“ஒரு தச்சுத் தொழிலாளியின் மகள்
மாநிலத் தேர்வில்
உச்சம் தொட்டிருப்பது
பெண்குலத்தின் பெருமை
சொல்கிறது
எப்படிப் பாராட்டுவது?
அண்மையில் நான்பெற்ற
தங்கப் பேனாவைத்
தங்கை நந்தினிக்குப்
பரிசளிக்கிறேன்
திண்டுக்கல் வருகிறேன்;
நேரில் தருகிறேன்
உன் கனவு
மெய்ப்படவேண்டும் பெண்ணே!” என குறிப்பிட்டு இருந்தார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் வைரமுத்துவை ட்ரோல் செய்து வருகின்றனர்,ஏன் என்றால் இதற்கு காரணம் அவர் அந்த டுவிட்டில் மாணவி நந்தினியை தங்கை என குறிப்பிட்டு இருந்தது தான். உங்கள் பேத்தி வயது இருக்கும் பெண்ணை நீங்கள் இப்படி தங்கை என சொல்லலாமா, பேத்தி என பதிவிட்டு இருந்தால் சரியாக இருந்திருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர் கேலி செய்துவர இதுபோன்ற நெட்டிசன்கள் பதிவிற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.