Thursday, December 26, 2024

ஒற்றை தவறினால் விஷமாக மாறும் சிக்கன்! மக்களே உஷார்

மற்ற இறைச்சிகளை விட விலை மலிவாக இருக்கும் சிக்கனில் உடலுக்கு தேவையான புரதமும் பிற ஊட்டச்சத்துக்களும் அதிக அளவில் உள்ளன.

ஆனால், தேவையற்ற உடல் உபாதைகளை தவிர்க்க நாம் பயன்படுத்தும் சிக்கன் தரமானதா என்பதை சரிபார்ப்பதும் முறையாக சமைத்து சாப்பிடுவதும் அவசியம்.

அமெரிக்காவில் உள்ள Centre for disease control அமைப்பு சிக்கனால் ஏற்படும் food poisoning பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் ready to cook வகையில் வரும் சிக்கன் உணவுகளை சரியாக சமைக்காததே chicken food poisoningக்கான முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. Frozen மற்றும் பதப்படுத்தப்பட்ட சிக்கன் சீக்கிரமாக சமைத்து சாப்பிட ஏற்றதாக விளம்பரப்படுத்தப் பட்டாலும் கூட, அவற்றை 74 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் சமைப்பது அவசியம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக அரைபதத்திற்கு சமைக்கப்பட்ட சிக்கன் உணவுப்பொருட்களில் மனிதனின் குடல் பாதையில் தொற்று ஏற்படுத்தக்கூடிய சல்மோனெல்லா பாக்டீரியா இருப்பதாகவும், அத்தகைய உணவை லேசாக microwave செய்வது மற்றும் airfryerகளை வைத்து சமைத்தால், அந்த வெப்பநிலையில் சாகாத பாக்டீரியா food poisoningஐ உண்டாக்கும் காரணியாக மாறுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில், 2021ஆம் ஆண்டில் மட்டுமே சல்மோனெல்லா பாக்டீரியாவால் 1.35 மில்லியன் தொற்றுகளும் 420 மரணங்களும் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Latest news