இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘வேட்டுவம்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (வயது 52) ஈடுபட்டு அதில் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது இறப்பு திரையுலகை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது.
இவரது குடும்பத்திற்கு திரைத்துறையினர் பலரும் பல உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்பு அவரது குடும்பத்திற்கு 1 லட்ச ரூபாய் காசொலையை கொடுத்துள்ளார்.