டிசைன் டிசைன்-னா பண மோசடிகள் திரும்பின திசையெல்லாம் முளைத்து மக்களை அலறவிடுகின்றன. அந்த வகையில் சிம் ஸ்வாப் என்ற புது வகை மோசடி தற்போது தலைதூக்கி இருக்கிறது. இதில், மோசடி செய்பவர், உங்கள் தொலைபேசி எண்ணை வேறொரு சிம் கார்டுக்கு மாற்றி, உங்கள் மொபைல் சேவைகளைப் பயன்படுத்தி, உங்களைப் பற்றிய தகவல்களைத் திருடவோ அல்லது கணக்குகளை கையாளவோ செய்கிறார்.
இது எப்படி வேலை செய்கிறது என்பதை பார்க்கலாம். மோசடி செய்பவர்கள், தொலைபேசி நிறுவன ஊழியர்களை ஏமாற்றி, உங்கள் தொலைபேசி எண்ணை அவர்களின் சிம் கார்டுக்கு மாற்ற முடியும்.
இல்லாவிட்டால் மோசடி செய்பவர்கள், உங்களை ஒரு போலியான இணையதளத்திற்கு அழைத்துச் சென்று, அதன் மூலமும் உங்கள் தொலைபேசி எண் மற்றும் பிற தகவல்களைத் திருடலாம். அல்லது மோசடி செய்பவர்கள், உங்கள் மொபைல் போனில் மால்வேர் அல்லது வைரஸ் மூலம் உங்கள் தகவல்களைத் திருட முடியும்.
சரி இந்த சிம் ஸ்வாப்பை தடுப்பது எப்படி? பாதுகாப்பான Password-களைப் பயன்படுத்துங்கள். உங்கள் சமூக ஊடக கணக்குகள் மற்றும் வங்கி கணக்குகளுக்கு வலிமையான Password-களை Set செய்யவும். 2 Step verification- முறையை பயன்படுத்தவும். இப்படி செய்வதன் மூலம் சிம் ஸ்வாப் மோசடியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்களைத் தவிர்க்கவும். உங்கள் மொபைல் ஃபோன் அல்லது சிம் கார்டில் ஏதேனும் அசாதாரண மாற்றங்கள் நடந்தால், உங்கள் தொலைபேசி நிறுவனத்தை உடனடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்.
நீங்கள் சிம் ஸ்வாப் மோசடிக்கு ஆளானதாக அறிந்தால் உங்கள் தொலைபேசி நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்களின் தொலைபேசி எண்ணை உடனடியாக Block செய்யவும். வங்கி மற்றும் பிற கணக்குகளைப் பாதுகாக்கவும். உங்கள் கணக்குகளைப் பாதுகாக்க Password-களை மாற்றவும். மேலும் சட்ட அமலாக்கத் துறையைத் தொடர்பு கொள்ளலாம். அல்லது உங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.