சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியிடம் இருந்து சிம்கார்டு, செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி மணிகண்டன். இவர் கடந்த ஒரு வருடமாக சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறைத்துறை சோதனை குழுவினர் மத்திய சிறையில் சோதனை செய்தனர். அப்போது, மணிகண்டன் செல்போன், சிம்கார்ட், பேட்டரி உள்ளிட்ட பொருட்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும், மத்திய சிறையில் செல்போன் பயன்படுத்திய ஆயுள் தண்டனை கைதி மணிகண்டன்னை மூன்று மாதம் உறவினர்கள் பேச தடை விதித்து சிறை கண்காணிப்பாளர் வினோத் உத்தரவிட்டுள்ளார்.