அப்பவே அல்வா கொடுத்துட்டாங்க! பட்ஜெட் அல்வாவின் சுவையான பாரம்பரிய பின்ணணி

207
Advertisement

2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.

ஆளும் கட்சியினர் பெருமைப்பட்டு கொண்டாலும், பட்ஜெட்டில் ஒண்ணுமே இல்லை, நல்லா அல்வா கொடுத்துட்டாங்க என எதிரிக்கட்சியினர் ஒரு புறம் குமுறி வருகின்றனர். ஆனால், பட்ஜெட் பணிகள் முடிவடைந்த பிறகு அல்வா கிண்டப்படுவது ஏன் தெரியுமா?

பட்ஜெட் தயாரிப்பு பணிகள் முடிந்ததை அடுத்து ஜனவரி 26ஆம் தேதி,  மத்திய நிதியமைச்சகத்தின் வடக்கு கட்டிடத்தில் மரபின் படி அல்வா கிண்டும் நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

பட்ஜெட் தயாரிப்பு பணியில் நேரடியாக ஈடுபடும் அதிகாரிகள் ரகசியங்களை வெளிப்படுத்தி விடக் கூடாது என்பதற்காக நிதியமைச்சகத்தின் North Blockஇல் தங்க வைக்கப்படுவார்கள். அதிகாரிகளின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையிலும், நம்பிக்கையை உறுதி செய்யும் வகையிலும் அப்போதய நிதியமைச்சர் அல்வா தயாரித்து வழங்கும் நிகழ்வு பாரம்பரியமாக  நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.