தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாகத் தென் மாநிலங்களில் உள்ள பல்வேறு கட்சிகளையும் ஒருங்கிணைத்து சென்னையில் வரும் மார்ச் 22ம் தேதி கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் ர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் “தான் ஏற்கனவே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதால் தன்னால் 22ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்க இயலாது. தமக்குப் பதில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், தமிழ்நாடு அரசின் கூட்டத்தில் பங்கேற்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.