லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 14) உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், அமீர்கான் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தை பார்க்க நடிகை ஸ்ருதிஹாசன் சென்னை, குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டருக்கு சென்றுள்ளார். அப்போது தியேட்டரின் பாதுகாவலர் ஒருவர் அவரை அடையாளம் காணாததால், உள்ளே நுழைய அனுமதி மறுத்துள்ளார்.
“நான் இந்தப் படத்தில் நடிச்சிருக்கேன். தயவுசெய்து உள்ளே விடுங்க அண்ணா. நான் தான் ஹீரோயின் சார்” என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார். பின்னர் கார் கண்ணாடியை திறந்து பார்த்து அடையாளம் கண்ட பின்னரே பாதுகாவலர் அவரை உள்ளே அனுமதித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.