Saturday, April 26, 2025

அய்யோ சாமி! ‘ஆளவிடுங்க’ ‘வீதிக்கு’ வந்த VK – DK பனிப்போர்?

RCB அணியில் அதிரடியாக ஆடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், தினேஷ் கார்த்திக் தற்போது அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கிறார். நடப்பு IPL தொடரில் வலுவான பிளெயிங் லெவனாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு திகழ்கிறது.

இதற்கு தினேஷ் கார்த்திக்கும் முக்கிய காரணமாகும். ஏலத்தின்போது Phil Saltஐ எடுத்தது தொடங்கி, பல்வேறு வகையிலும் அவரின் பங்கு அளப்பரியதாக உள்ளது. இந்தநிலையில் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் King கோலிக்கும், தினேஷ் கார்த்திக்கிற்கும் இடையில் பனிப்போர் வெடித்துள்ளதாகத் தெரிகிறது.

ஏப்ரல் 24ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் சின்னச்சாமி மைதானத்தில் மோதின. இதற்கு முன் அங்கு ஆடிய 3 போட்டிகளையும் RCB தோற்றிருந்தது. ஆனால் இந்தமுறை சுதாரித்துக் கொண்டு RRஐ வீழ்த்தி, சொந்த மைதானத்தில் வெற்றிவாகை சூடியது.

இதற்கு ஹேசல்வுட்டின் பந்துவீச்சே முக்கிய காரணமாகும். போட்டியின்போது லாங் ஆன் பவுண்டரி லைனில் விராட் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது தலைமை பயிற்சியாளர் ஆண்டி பிளவர், தினேஷ் கார்த்திக் இருவரும் கோலியை அழைத்து, ஏதோ அட்வைஸ் செய்தனர்.

ஆனால் அவர்களின் அட்வைஸை கோலி மதிக்கவில்லை. தினேஷ் கார்த்திக்கை கையெடுத்து கும்பிட்டு வெளியேறி விட்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக, ” விராட்- தினேஷ் இருவருக்கும் இடையிலான பனிப்போர், தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது,” என்று, ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Latest news