கொல்கத்தாவிற்கு கப்படித்து கொடுத்த கையோடு, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சென்று விட்டார் ஷ்ரேயாஸ் அய்யர். பஞ்சாப் கேப்டன், சாம்பியன்ஸ் டிராபி வெற்றி, மீண்டும் BCCI காண்ட்ராக்ட் என்று, ஏகப்பட்ட நல்ல விஷயங்கள் ஷ்ரேயாஸுக்கு நடந்துள்ளன.
அவரின் தலைமையில் பஞ்சாப் அணியும் நடப்பு IPL தொடரில், குறைந்த ரன்னை Defend செய்து வித்தை காட்டி வருகிறது. தற்போது Play Off ரேஸ் சூடு பிடித்திருப்பதால் அனைத்து அணிகளுமே, வெற்றிக்கு முட்டி மோதுகின்றன.
அந்தவகையில் பஞ்சாப் அணியும் சிலபல மாற்றங்களை அணியில் செய்துள்ளது. அதன்படி கடந்தாண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிய, தனுஷ் கோடியனை நெட் பவுலராக இறக்கி உள்ளனர். பல்வேறு வேரியேஷன்களில் பந்து வீசக்கூடியவர் என்பதால், அவர்மீது நம்பிக்கை வைத்து ஷ்ரேயாஸ் இந்த வாய்ப்பினை அளித்துள்ளதாகத் தெரிகிறது.
தனுஷ் கோடியன் நன்றாக பெர்பார்ம் செய்தால், பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனிலும் அவர் இடம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.