ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 3 நாள் விழா நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசும்போது கூறியதாவது:-
பாஜக தலைவரை தேர்ந்தெடுப்பதில் தங்கள் பங்கு இல்லை என்றும், நான் ஓய்வு பெறுவேன் என்றோ, அல்லது வேறு யாராவது 75 வயதை எட்டும்போது ஓய்வு பெற் வேண்டும் என்றோ கூறவில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
எனக்கு 80 வயதாக இருந்தாலும்” ஆர்எஸ்எஸ்-ஐ தொடர்ந்து நடத்துவேன் என்றும் அறிவித்தார். “எங்களுக்கு என்ன செய்யச் சொல்லப்படுகிறதோ அதை நாங்கள் செய்கிறோம்,” என்று அவர் விளக்கமளித்தார்.
75 வயதை எட்டிய பிறகு, மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்ற எந்த விதியும் இல்லை என்று பாஜக பலமுறை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.