Thursday, May 8, 2025

செங்கல்பட்டில் இருந்து சென்னை புறநகர் பகுதிகளுக்கு பேருந்து பற்றாக்குறை – பயணிகள் புகார்

செங்கல்பட்டில் இருந்து சென்னை புறநகர் பகுதிகளுக்கு, போதியளவில் மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என பயணிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.

செங்கல்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து சென்னை தாம்பரத்துக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. காலை மற்றும் மாலை வேலைகளில் அதிகளவில் மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குறிப்பாக மாலை 6மணி முதல் 7 மணி வரை போதிய பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என பயணிகள் குற்றச்சாட்டியுள்ளனர். நீண்ட நேரம் பேருந்து இல்லாமல் காத்திருப்பதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest news