உத்தரப் பிரதேசத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி வீடு முன் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ரெபேலி நகரில் உள்ள பாலிவுட் நடிகை திஷா பதானி வீட்டின் முன், அதிகாலை நேரத்தில் இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டின் பின்னணியில் உள்ள மிரட்டல் பதிவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்து துறவிகள் பிரேமானந்த் மகாராஜ், அனிருதாசார்யா மகாராஜ் ஆகியோரை இழிவுப்படுத்தி பேசியதற்காக துப்பாக்கி சூடு நடத்தினோம் என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது வெறும் டிரைலர்தான். அடுத்த முறை, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் உயிரோடு இருக்க முடியாது என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
