கடும் சித்திரவதை.., காவலாளி அஜித் குமார் மரணத்தில் வந்த ஷாக் தகவல்

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதான கோவில் காவலாளி அஜித் குமார் காவல்துறை விசாரணையில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்தபோது அவருக்கு கடும் சித்திரவதை செய்ததற்கான அடையாளங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரேதப் பரிசோதனை முடிவுகள் முதற்கட்ட தகவலில்  குறைந்தது 18 வெளிப்புற காயங்கள் உடலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காயங்கள் மண்டையோடு தொடங்கி, கை, முதுகு, கால்கள் என உடல் முழுவதும் பரவியுள்ளன. மேலும், உளவியல் அடிப்படையில் ஏற்பட்ட அதிர்ச்சி, அழுத்தம் மற்றும் உட்புற ரத்தக்கசியல் போன்றவை கூட மரணத்திற்கு வழிவகுத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Related News

Latest News