தங்கம் விலை மீண்டும் ஏற்ற மற்றும் இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த மாதம் ஏப். 29-ந் தேதி விலை குறைந்து,
நேற்று முன்தினம் விலை உயர்ந்தது. இதனையடுத்து, நேற்று விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14.100-க்கும், ஒரு சவரன் ரூ.1.12.800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து இருந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று மாலையில் மேலும் கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் குறைந்தது.
அதாவது, நேற்று ஒரே நாளில் 2 முறை குறைந்தது. மொத்தம் கிராமுக்கு ரூ.180-ம், சவரனுக்கு ரூ.1,440-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13.920-க்கும், ஒரு சவரன் ரூ.1.11.360-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,12,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், பார் வெள்ளி 2.70.000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
