கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் அருகே உள்ள நெல்லித்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராமர்(வயது 63). இவருடைய 2 சகோதரர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். விவசாயிகளான இவர்கள் 3 பேருக்கும் பொதுவான நிலம் உள்ளது. இந்த நிலத்தை பிரிப்பது தொடர்பாக 3 பேரின் குடும்பத்தினர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து செல்வராணி என்ற பெண்ணை மரத்தில் கட்டிவைத்து அடித்து, உதைத்தனர். உருட்டு கட்டையாலும் தாக்கப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவத்தை செல்போனில் வீடியோ எடுத்தவரையும், அவர்கள் தாக்க முயன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.