IPLல் அதிரடி காட்டும் வீரர்களுக்கு இந்திய அணியில் தொடர்ந்து இடம் கிடைக்கிறது. BCCIன் இந்த முடிவினை கிரிக்கெட் விமர்சகர்கள் எதிர்த்தாலும், BCCI இதுபோன்ற எதிர்ப்புகளை கண்டு கொள்வதில்லை. இதனால் இந்திய அணி கனவில் இருக்கும் இளம்வீரர்கள் பலரும், IPL தொடரில் உயிரைக் கொடுத்து ஆடுகின்றனர்.
இதற்கிடையில் கடந்த சில நாட்களாக இளம்வீரரும், விக்கெட் கீப்பருமான இஷான் கிஷனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. உள்ளூர் தொடர்களில் BCCI சொல்லியும் ஆடவில்லை என்பது தான், டீமில் இஷானுக்கு இடம் கிடைக்காமல் போனதற்கு காரணமாகும்.
ஆனால் ஹைதராபாத் அணியின் பயிற்சி தொடரில், அடுத்தடுத்து அரைசதம் அடித்து இஷான் கெத்து காட்டியிருக்கிறார். இதனால் அவரை மன்னித்து இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று, கிரிக்கெட் விமர்சகர் ஆகாஷ் சோப்ரா உட்பட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் அதற்கு வாய்ப்பில்லை ராஜா என்பது போல BCCIயின் நடவடிக்கைகள் உள்ளன. அண்மையில் நடைபெற்ற மீட்டிங்கில் இஷான் குறித்து பேச்சு எழுந்துள்ளது. அப்போது, ”BCCI சொல்லியும் அந்த உத்தரவை மதிக்காமல் இஷான் உள்ளூர் தொடர்களில் ஆடவில்லை.
IPL தொடரில் அதிரடி காட்டிய பிறகு அவரை மீண்டும் அணியில் சேர்த்தால், மற்ற இளம் வீரர்களும் இப்படி சொல்பேச்சு கேட்காமல் போய் விடுவார்கள். இது வருங்காலத்தில் பெரிய பிரச்சினையாக மாறிவிடும். இதனால், இஷான் கிஷனை ஒரேயடியாக மறந்துவிடுவதுதான் நல்லது,” என்று அனைத்து நிர்வாகிகளும் ஒருமனதாக முடிவு செய்துள்ளனராம்.
இதனால் இஷான் கிஷன் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பது, குதிரைக் கொம்பாக மாறியுள்ளது. அணியில் இடம்பெற வீரர்களுக்கு மத்தியில் கடும்போட்டி இருப்பதால், இஷானின் நிலைமை தற்போது பரிதாபகரமாக மாறியுள்ளது. இதனால் ஷ்ரேயஸ் போல மீண்டும் ஒரு வாய்ப்பு இஷானுக்குக் கிடைக்குமா? என்னும் கேள்வி எழுந்துள்ளது. இதற்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்