Friday, May 9, 2025

I phone 13 pro max ஆர்டர் செய்தவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

ஆன்லைனில் I phone 13 pro max ஆர்டர் கொடுத்தவருக்கு காலி சோப்பு டப்பா அனுப்பிய ஆன்லைன் நிறுவனத்தின் செயல் அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.

வடக்கு லண்டன் பகுதியைச் சேர்ந்தவர் கௌலா லாஃப்ஹைலி. 32 வயதாகும் இந்தப் பெண்மணி சமீபத்தில் I phone 13 pro max க்கு ஸ்கை மொபைல் மூலம் ஆர்டர்செய்தார். அந்த ஐ போனின் விலை ஆயிரத்து 500 டாலர். முன்பணமாக 150 டாலர் தொகையை செலுத்தியிருந்தார். மீதமுள்ள தொகையை தவணை முறையில் 3 ஆண்டுகளில் செலுத்திவிடுவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து அந்த நிறும் I phone 13 pro max ஐ தபால் மூலம் அனுப்பியது. அந்த போனை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தார் லாஃப்ஹைலி.

2 நாட்கள் கழித்து அவரது வீட்டுக்கு ஒரு தபால் வந்தது. பேராவலுடன் அந்தப் பார்சலைப் பிரித்துப் பார்த்தார்.

ஆனால், அந்தப் பார்சலுக்குள் கையைக் கழுவும் ஒரு காலி சோப் டப்பா இருந்ததைக்கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

தனது ஐ போன் திருடப்பட்டதாக உணர்ந்த லாஃப்ஹைலி, ஆர்டர்கொடுத்த நிறுவனத்திடம் புகார் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்குள் வேறு புது ஐ போன் அனுப்பி வைக்கப்படும் என்று அந்த ஆன்லைன் நிறுவனம் உறுதியளித்தது.
உறுதியளித்தபடி 7 நாட்களுக்குள் அந்த நிறுவனம் புது செல்போன் அனுப்பி வைக்காததால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் லாஃப்ஹைலி. வழக்கை விசாரித்த நீதிமன்றம் வேறு ஒரு புது ஐ போனை லாஃப்ஹைலிக்கு வழங்க ஆன்லைன் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

ஆன்லைன் வணிகத்தில் அவ்வப்போது மோசடி நடைபெற்றாலும், விலைகுறைவு, அலைச்சல் இல்லை போன்ற பல்வேறு காரணங்களால் நுகர்வோர் பலர் மீண்டும் மீண்டும் அதையே தொடர்கின்றனர். நேரில் பல நிறுவனங்களுக்குச் சென்று, பொருட்களின் தரத்தைப் பரிசோதித்து, பேரம் பேசி வாங்கி மகிழும் அனுபவமே தனிதான் என்பதை அனுபவசாலிகள் நன்கு உணர்வர்.

Latest news