Friday, January 23, 2026

இப்படியும் மோசடி நடக்குது.., ஆன்லைனில் காலணி ஆர்டர் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

டெல்லியில் மதுயிகா சர்மா என்ற பெண், ஒரு இ-காமர்ஸ் தளத்தில் ரூ.6,000 மதிப்புள்ள காலணிகளை ஆர்டர் செய்தார். அவருடைய வீட்டு எண் முகவரியில் கொடுக்கப்படவில்லை என்ற காரணத்தால், அவருக்கு “உங்கள் ஆர்டரின் டெலிவரி நிறுத்தப்பட்டது” என்ற ஒரு செய்தி வந்தது.

பல்வேறு எண்களில் இருந்து ஒரே மாதிரியான செய்தியாக வந்தது. அந்தச் செய்தியை உண்மையாக நினைத்து, உள்ள இணைப்பை திறந்தபோது, அந்த இணைப்பு dhlino.cc.in என்ற வலைத்தளத்திற்கு அவரை கொண்டு சென்றது. அங்கே தனது நிஜமான தகவல்களை உள்ளிட்டு அனுப்பியபோது, அவரது கிரெடிட் கார்டிலிருந்து ரூ.51,700 பணம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி குறித்து வங்கி மற்றும் பிற நிறுவனங்களுக்குத் தெரிவித்தபோதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்தப் பெண் கூறினார். இப்போது அந்த பெண் வங்கி, ரிசர்வ் வங்கி மற்றும் பிற நிறுவனங்களை அணுகி உதவி கேட்டு முறையிட்டுள்ளார்.

இதுபோன்ற மோசடிகளைத் தவிர்ப்பதற்கு:

சந்தேகமான தொலைபேசி எண்கள் அல்லது SMS/மின்னஞ்சலில் வரும் இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம். இவை பெரும்பாலும் ஃபிஷிங் (Phishing) முயற்சிகளாக இருக்கும். நீங்கள் ஆர்டர் செய்த தளத்தின் உண்மையான இணைய முகவரியை (URL) சரிபார்க்கவும்.

நீங்கள் ஏமாற்றப்பட்டிருந்தால் உடனே உங்கள் வங்கி மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை தொடர்பு கொண்டு, உங்கள் கிரெடிட்/டெபிட் கார்டு செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளுங்கள். இந்திய சைபர் குற்றங்கள் தொடர்பான புகார் எண்ணான 1930-ஐ அழைத்து உடனுக்குடன் புகார் செய்யவும்.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால், இத்தகைய சைபர் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

Related News

Latest News