பொதுவாக சாலையில் வாகனம் ஓட்டும்போது, ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் கேட்டால், யாராக இருந்தாலும் வழிவிட்டுவிடுவார்கள். ஏனென்றால் பாதிக்கப்பட்டவர் விரைவாக மருத்துவமனைக்குச் சென்றால், அவர் உயிர் பிழைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
அவசர காலங்களில் நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லவும், உயிர்களைக் காப்பாற்றவும் பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸ்களை சிலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் பஞ்சகுட்டா அருகே வேகமாக வந்த ஆம்புலன்சை போலீசார் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். உள்ளே நோயாளிக்கு பதிலாக நாய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆம்புலன்ஸை தவறாக பயன்படுத்தியதால் ஓட்டுநர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.