பயணம் செய்யும்போது கப்பல் காணாமல் போனால்
முழுக்கட்டணத்தையும் பயணிகளுக்குத் திரும்பத்
தந்துவிடுவதாகக் கப்பல் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்காவின் தென்
கிழக்குக் கடற்கரையில் பெர்முடா, புளோரிடா மற்றும்
போர்ட்டோ ரிக்கோ இடையே அமைந்துள்ள பகுதி
பெர்முடா முக்கோணம் என்று அழைக்கப்படுகிறது.
இங்கு பல கப்பல்கள் மற்றும் விமானங்கள் மர்மமான
முறையில் காணாமல் போனதால் இது பிசாசு முக்
கோணம் என்று அழைக்கப்படுகிறது.
இந்தப் பகுதி வழியாக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில்
நியூயார்க் நகரிலிருந்து சொகுசுக் கப்பலை இயக்கப்
போவதாக நார்வேஜியன் பிரைமா கப்பல் நிர்வாகம்
அறிவித்துள்ளது. 2 நாள் பயணத்திற்கு 1 லட்சத்து
40 ஆயிரம் ரூபாய்க் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தின்போது இந்த திகில் பயணத்தின்
வரலாறு, சொற்பொழிவுகள், பலவிதக் கேள்வி- பதில்
நிகழ்ச்சிகளுடன் கண்ணாடி அடிப் படகின்மேல்
பயணிக்கும் த்ரில் பயணமும் இடம்பெறுகிறது.
இதுபற்றித் தனது இணையதளத்தில் அறிவித்துள்ள
கப்பல் நிறுவனம், ”இந்தப் பெர்முடா முக்கோண சுற்றுப்
பயணத்தில் காணாமல் போவதைப் பற்றிக் கவலைப்பட
வேண்டாம். நீங்கள் காணாமல் போனால் முழுக்
கட்டணமும் திரும்பத் தரப்படும்” என்று தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்புதான் தற்போது அதிரவைத்துள்ளது. இந்த
அறிவிப்பு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
.