Wednesday, February 18, 2026

“அவள் உயிர் கொடுத்தது ஒரு உறவுக்காக…” வைரலாகும் ஜாய் கிரிஸில்டாவின் பதிவு!

பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது இரண்டாவது மனைவி ஜாய் கிரிசில்டா குறித்த சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதை ந சமூகவலைத்தளங்களில் பார்த்து வருகிறோம்.இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்து, அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஆனாலும், முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறாமல், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக கூறப்படுவது தான் பெரும் சர்ச்சைக்கும் காரணமாக அமைந்தனர்.

இந்த நிலையில், ஜாய் கிரிசில்டா இது தொடர்பாக நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ஜாய், ரங்கராஜ் தனக்குக் கடன் இருப்பதாகவும், கர்ப்பத்தைக் கலைக்கச் சொன்னதாகவும் ஏற்கனவே அளித்த பேட்டிகளில் ஜாய் கிரிசில்டா தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, மாதம்பட்டி ரங்கராஜுவுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை ஜாய் கிரிசில்டா அவ்வபோது தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜூடன் இருக்கும் புகைப்படங்களை அவரது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். அந்த பதிவில்; கருவிலே உயிர் உருவாகும் போது, உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது.” நான் உள்ளே துடிக்க நீ வெளியே தப்பிக்கிறாய்… இதுதானா உன் அன்பு அறிமுகம்….???? என்று கூறியுள்ளார். மேலும், அவரது இன்ஸ்டாவில் இன்னொரு பதிவையும் பதிவிட்டுள்ளார் அதில், “அவள் உயிர் கொடுத்தது ஒரு உறவுக்காக… அவன் ஆட பார்த்தது ஒரு விளையாட்டுக்காக.” எனவும் மாதம்பட்டி ரங்கராஜூடன் ஜாய் கிரிசில்டா இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.தற்போது இந்த பதிவுகள் வைரலாகி வருகிறது.

Related News

Latest News