திருவனந்தபுரம், கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் (வயது 23). இவர் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது காதலியான குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கிரீஷ்மா (24) என்ற இளம்பெண்ணால் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கிரீஷ்மா மற்றும் அவருக்கு உடைந்தையாக செயல்பட்ட அவரது தாய்மாமா நிர்மல்குமார் ஆகியோரை குற்றவாளிகளாக நெய்யாற்றின்கரை கோர்ட்டு கடந்த 17-ம் தேதி அறிவித்தது.
இந்நிலையில் காதலனை கொன்ற வழக்கில் முதன்மை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அவரது மாமா நிர்மல் குமாருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.